Theme Check

“எனது அடுத்த திட்டம் இதுதான்” : சென்னை மேயர் பிரியா அதிரடி!!

“எனது அடுத்த திட்டம் இதுதான்” : சென்னை மேயர் பிரியா அதிரடி!!

“எனது அடுத்த திட்டம் இதுதான்” : சென்னை மேயர் பிரியா அதிரடி!!
X

சென்னை மாநகராட்சியின் புதிய மேயராக பதவியேற்றுள்ள பிரியா தனது திட்டம் குறித்து பேசியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் மேயராக திருவிக நகர் 74-ஆவது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் மார்ச் 4 வெள்ளிக்கிழமை அன்று பதவியேற்றுக்கொண்டார்.

அரசியல் குடும்ப பின்னணியை கொண்ட பிரியா ராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி. பிரியாவின் தந்தை ராஜன் திரு.வி..நகர் திமுக பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். 28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார்.

chennai-mayor 1

சென்னை மாநகராட்சி வரலாற்றில் தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் வரிசையில் மூன்றாவது பெண் மேயர், முதல் தலித் சமூக பெண் மேயர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான பிரியா ராஜன் தனது பணியை எப்படி செய்யப்போகிறார் சென்னை மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

குறிப்பாக வடசென்னை பகுதியை சேர்ந்த பிரியா ராஜன் வட சென்னை மக்களுக்காக சென்ன செய்யப்போகிறார் என்று ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தன்னை நம்பி முதலமைச்சர் மு..ஸ்டாலின் மாபெரும் பொறுப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

chennai-mayor 1

அதனால் சென்னை மாநகராட்சியை உலகத்தரம் வாய்ந்த நகராக மாற்றுவதே இலக்கு என்றும் குறிப்பாக வட சென்னை மக்களின் முக்கிய பிரச்னையான மழைநீர் தேக்கம், சுகாதார மேம்பாடு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்போவதாக கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it