‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யின் பெயர் இதுதான்.. வெளியான தகவல்..!
‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யின் பெயர் இதுதான்.. வெளியான தகவல்..!

பொதுவாக, விஜய்யின் படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘பீஸ்ட்’ படத்தில் ரா ஏஜென்ட் ஆக விஜய் நடிப்பதாக தகவல்கள் வந்தன. ஒரு கும்பலிடம் பொதுமக்கள் மாட்டிக்கொள்கின்றனர். அவர்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை ஆக்ஷன், திரில்லர், காமெடி கலந்து உருவாக்கியிருக்கிறார் நெல்சன்.
மேலும் விஜய் படங்களிலிருந்து இப்படம் சற்று மாறுபட்டு இருந்தாலும் அவர் ரசிகர்களுக்கு ஏற்ற கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் பற்றி இணையத்தில் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது, படத்தில் ரா ஏஜென்ட் ஆக வரும் விஜய்யின் பெயர் வீர ராகவனாம்.
படத்தில் விஜய்யின் முழு பெயர் வீர ராகவன் என்றும், மேலும் விஜய்யை வீரா என்று படத்தில் மற்றவர்கள் அழைப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

