Theme Check

மாணவர்கள் தமிழில் ஃபெயிலாக இதுதான் காரணம் : சைலேந்திர பாபு விளக்கம்!!

மாணவர்கள் தமிழில் ஃபெயிலாக இதுதான் காரணம் : சைலேந்திர பாபு விளக்கம்!!

மாணவர்கள் தமிழில் ஃபெயிலாக இதுதான் காரணம் : சைலேந்திர பாபு விளக்கம்!!
X

10ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக அளவில் தமிழ் பாடத்தில் ஃபெயில் ஆக காரணம் மற்ற பாடங்களில் கவனம் செலுத்தி தமிழை சரியாக படிக்காமல் விடுவதே என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

அண்மையில் 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். அதே நேரத்தில் தமிழ் பாடத்தில் ஃபெயில் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்திருந்தது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் தமிழ் மீது கவனம் செலுத்துவது குறைந்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழில் அதிக அளவில் ஃபெயில் ஆனதற்கு தமிழக டிஜிபி கவலை தெரிவித்துள்ளார்.

sylendra babu

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் ஃபெயில் ஆனது பார்த்து கவலை அடைந்தேன். பல்வேறு நுழைவுத் தேர்வுகளை மனதில் வைத்து தமிழை விட மற்ற பாடங்களுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதுதான் இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

கற்றலில் ஆர்வம் செலுத்தினால் தாய் மொழி தமிழில் மாணவர்கள் சாதிக்கலாம், எந்தவொரு பாடத்தையும் எளிதாக கற்கலாம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it