இந்த தேர்வை தள்ளி வைக்கணும்.. இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை..!
இந்த தேர்வை தள்ளி வைக்கணும்.. இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை..!

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 21-ம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தோ்வு தாமதமாகவே நடைபெற்றது. கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான தோ்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால் பல்வேறு தரப்பினர் முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா-வுக்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story

