Theme Check

குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்.. அடுத்த சர்ச்சைக்கு அச்சாரம் போட்டார் பாக்யராஜ்..!

குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்.. அடுத்த சர்ச்சைக்கு அச்சாரம் போட்டார் பாக்யராஜ்..!

குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்.. அடுத்த சர்ச்சைக்கு அச்சாரம் போட்டார் பாக்யராஜ்..!
X

தமிழக பாஜக தலைமையகமான சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை.

பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால், இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்..? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார்..? என்று நான் வியக்கிறேன்.
பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்: கே  பாக்யராஜ் - தமிழ் News - IndiaGlitz.com
தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார். எனவே, பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், புத்தகம் ஒன்றில் முன்னுரை எழுதிய இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜகவினர் இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், இளையராஜாவுக்கு எதிராக எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது இயக்குநர் பாக்கியராஜ் “பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it