நடிகை சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் எனக்கு கொலை மிரட்டல்.. கணவர் ஹேம்நாத் பகீர் புகார்

நடிகை சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் எனக்கு கொலை மிரட்டல்.. கணவர் ஹேம்நாத் பகீர் புகார்

நடிகை சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் எனக்கு கொலை மிரட்டல்.. கணவர் ஹேம்நாத் பகீர் புகார்
X

சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தந்தை நசரத் பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சித்ராவிற்கும் ஹேம்நாத்திற்கும் பதிவு திருமணம் நடைப்பெற்றிருந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அவரது கணவரான ஹேம்நாத் தான் காரணம் என புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் டிசம்பர் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கபட்டார்.

chithra

இந்நிலையில் கடந்த 25ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஹேம்நாத் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன் என தெரிவித்தார்.

chithra

சித்ரா மரணத்துக்கு முன்னாள் அமைச்சர், ஒரு முக்கிய அரசியல்வாதி, போதை கும்பல், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் தான் காரணம். அவர்கள் மிகுந்த பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. எனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலமிக்க மாஃபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும்.
chithra


மேலும், மரணத்திற்கு காரணமானவரிடம் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரிடம் பணம் பறிக்க முயல்வதாகவும் அதற்கு நான் ஒத்துழைக்கவில்லையென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். தற்போது நான் உயிருக்கு பயந்து என்னுடைய வழக்கறிஞர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார், மேலும் என்னுடைய மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களின் பெயரை வெளியே சொன்னால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அந்த அரசியல் தலைவர் மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படியே இருதரப்பினரும் என்னை மிரட்டி வருவதால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது.

chithra

மேலும் எனது மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உயிர் வாழ விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல் ஒரு வேளை நான் முன்னரே இறந்துவிடும் நிலை வந்தால் என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் சொன்ன தகவல்களை வெளியிடுவேன். தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியவர்களால், தனக்கும் ஆபத்து இருப்பதால், தனக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் தற்போது கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Tags:
Next Story
Share it