Theme Check

மிரட்டல், த்ரில்லர்.. ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா'க்கு வரவேற்பு !!

மிரட்டல், த்ரில்லர்.. ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா'க்கு வரவேற்பு !!

மிரட்டல், த்ரில்லர்.. ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனாக்கு வரவேற்பு !!
X

ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நாயகிளுக்கு முக்கியத்துவம் தரும் கதையை அதிகம் தேர்ந்தெடுக்கும் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளார். அந்த வகையில் அவர் நடித்த காக்கா முட்டை, கனா உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. அந்த வரிசையில் தற்போது டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தை தேர்வு செய்து நடித்துள்ளார்.

'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்கிறார்.

sad

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் கேப் (cab) டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாலஜாபாத் டூ ஈசிஆர் பயணமே மொத்த படமாக இருக்கும் என தெரிகிறது. அதாவது, வாலாஜாபாத்தில் இருந்து ஈ.சி ஆர் செல்ல வாடகை கார் எடுத்துசெல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ், கொலை கும்பலிடம் சிக்கிக்கொள்கிறார். பின்னர் போலீஸும் துரத்துகிறது. இதனை சமாளித்து எதிர்கொள்ளும் துணிச்சல் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

" style="border: 0px; overflow: hidden"" title="Driver Jamuna - Official Tamil Trailer | Aishwarya Rajesh | P Kinslin | Ghibran | S.P. Chowthari" width="811">

யூடியூப்பில் வெளியாகியுள்ள அந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற தொடங்கியுள்ளது. அண்மையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'சுழல்' வெப்சீரிஸ் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it