தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்.. ஓ.பன்னீர்செல்வம் பதிலடி !!
தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்.. ஓ.பன்னீர்செல்வம் பதிலடி !!

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இருவரும் ஒவ்வொரு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றுமுன்தினம் சென்னை வந்த யஷ்வந்த் சின்ஹா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டினார். அதேபோன்று, இன்று தமிழகம் வந்த திரவுபதி முர்மு, கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்தார் அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை காரணமாக ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், அதிமுக சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என தெரிவித்தார்.
கடந்த 23 ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் தற்போது ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் மட்டுமே என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வரும் நிலையில், ஓ பன்னீர் செல்வம் மேற்கண்ட பதிலை அளித்துள்ளார்.
newstm.in

