டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய அவகாசம்!!
டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய அவகாசம்!!

TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( TET ) 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
தேர்வர்களின் கோரிக்கையை ஏற்ற ஆசிரியர் தேர்வு வாரியம், ஒருமுறை வாய்ப்பாக நாளை முதல் வரும் 27ஆம் தேதி வரை www.trb.tn.nic.in இணையதளத்தில் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இனிவரும் காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள எவ்வித வாய்ப்பும் வழங்கப்படாது என்பதால், திருத்தம் செய்யும் போதே கவனமாக உரிய திருத்தங்களை மேற்கொண்டு, பின் அதை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
newstm.in

