Theme Check

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்.. 7 இடங்களில் நேற்று வெயில் சதம் !!

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்.. 7 இடங்களில் நேற்று வெயில் சதம் !!

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்.. 7 இடங்களில் நேற்று வெயில் சதம் !!
X

நடப்பாண்டு கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதன் காரணமாக அக்னி வெயிலின் உச்சம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்பட்டது.

அதன்படி அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4ஆம் தேதி முதலே வெயில் வாட்டியது. எனினும் அவ்வப்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் ஆகிய காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் மழை பெய்ததால் வெப்பத்தில் இருந்துதப்பித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

heat

இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கோடை காலத்தில் முதல் 2 வாரங்களுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது சென்னையில் அதிகபட்சமாக கடந்த 23 மற்றும் 24ந்தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவானது.

heat

அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. எனினும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் நேற்று 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், வேலூரில் தலா 102 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கம், கரூா்பரமத்தி, திருச்சியில் தலா 101 டிகிரியும், நாகப்பட்டினம், தஞ்சாவூரில் தலா 100 டிகிரியும் பதிவானது. கடலூா், மதுரையில் தலா 99 டிகிரி வெப்பநிலை பதிவானது.

newstm.in

Next Story
Share it