இன்று தேசிய துக்க தினம் அனுசரிப்பு!!
இன்று தேசிய துக்க தினம் அனுசரிப்பு!!

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார் . நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அபேவுக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மயங்க நிலையில் இருந்த ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவர் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார். அவர் இந்நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற இடத்தை பிடித்தவர்.
அபேவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ஷின்சோ அபேவின் மறைவு சொல்லமுடியாத வருத்தத்தை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

எனவே ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
newstm.in

