இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.! தமிழக அரசு உத்தரவு
இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.! தமிழக அரசு உத்தரவு

கோவை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் (ஜூலை 8) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுளார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட நகர் பகுதிகளிலும், வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.
இதனால், ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

