இன்று இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
இன்று இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

இந்து நாட்காட்டிபடி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும்.
இன்று விடப்படும் விடுமுறைக்கு பதிலாக இரண்டாவது சனிக்கிழமையான 12ஆம் தேதி வேலை நாளாக இருக்கும். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

