இன்று உள்ளூர் விடுமுறை!! அரசு அறிவிப்பு
இன்று உள்ளூர் விடுமுறை!! அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட நாட்களை முன்னிட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் தனியே உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில், காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்குத் தரிசனம் தரும் ஆயிரங்காளி அம்மன் திருவிழா நாளை நடைபெற உள்ளது.

இதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருவார்கள்.இந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (ஜூன் 8) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.

அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 11-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

