இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!
இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் கடந்த 9ஆம் தேதி பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

இதனையடுத்து பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13ஆம் தேதி வெள்ளி ரிஷபத்தில் சகோபுர வீதியுலா (தெருவடைச்சான் சப்பரம்) நடைபெற்றது. இதனையடுத்து இன்று 17ஆம் தேதி தேரோட்டமும், 20ஆம் தேதி தெப்ப உற்சவமும், 21ஆம் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடக்கிறது.
இந்நிலையில், கைலாசநாதர் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு காரைக்காலில் இன்று (17-03-2022) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனிடையே, ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், அறங்காவல் குழுவினர், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

