இன்றே இறுதி... நாளை கூடுதல் கட்டணம்.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
இன்றே இறுதி... நாளை கூடுதல் கட்டணம்.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இன்று (4-ம் தேதி) விண்ணப்பிக்காதவர்கள், நாளை (5-ம் தேதி) முதல் 7-ம் தேதி வரை கூடுதல் கட்டணம் செலுத்தி, தட்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து, அதை வைத்து ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
புதிதாக தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களும், அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, பிளஸ் 1-ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும், பிளஸ் 2-வுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். துணைத் தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

