வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று மோதல்.. கே.எல்.ராகுல் விலகல் !

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று மோதல்.. கே.எல்.ராகுல் விலகல் !

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று மோதல்.. கே.எல்.ராகுல் விலகல் !
X

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டித்தொடரை வென்று அசத்தியது. இதனையடுத்து மேற்கு இந்திய தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும், முதல் ஒருநாள் போட்டி போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

shikar dhavan

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அனுபவ வீரர் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. டி20 தொடரில் இடம் பெற்றுள்ள அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

ege

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி 20 அணியில் ராகுல் இடம் பெறாத பட்சத்தில் இஷான் கிஷான், தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. சொந்த ஊரில் விளையாடுவதோடு பூரன் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணியும் அதிரடி வீரர்களால் நிறைந்துள்ளதால் இப்போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it