டோல்கேட் கட்டணம் உயர்வு.. கோபத்தில் ஊழியரை தாக்கிய பெண்.. பரனூரில் பரபரப்பு..!
டோல்கேட் கட்டணம் உயர்வு.. கோபத்தில் ஊழியரை தாக்கிய பெண்.. பரனூரில் பரபரப்பு..!

தமிழகத்தில் உள்ள டோல்கேட்களில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடிக்கு நேற்று நள்ளிரவு காரில் வந்த பெண் ஒருவர், பாஸ்டேக் மூலம் பணம் செலுத்த முயன்றபோது அதில், பேலன்ஸ் குறைவாக இருந்துள்ளது.

இதையடுத்து, 110 ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு காரை எடுத்துச் சொல்லுங்கள் என ஊழியர் கூறியுள்ளார். இதையடுத்து, ‘இரண்டு மடங்கு கட்டணம் கேட்பதா..?’ எனக் கோபமடைந்த அந்தப் பெண், ஊழியர்களிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியுள்ளார். மேலும், அவருடன் வந்த ஆண் உறவினர், ஊழியரை தாக்கியதோடு சுங்கச்சாவடி கண்ணாடியை உடைத்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக, செங்கல்பட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் டோல்கேட் ஊழியரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், தற்போது மீண்டும் பெண்ணொருவர் ஊழியரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

