Theme Check

சதமடித்தது தக்காளி விலை.. சங்கடத்தில் பொதுமக்கள்..!

சதமடித்தது தக்காளி விலை.. சங்கடத்தில் பொதுமக்கள்..!

சதமடித்தது தக்காளி விலை.. சங்கடத்தில் பொதுமக்கள்..!
X

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி படிப்படியாக உயர்ந்து 80 ரூபாய் 90 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதை அடுத்து தற்போது கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை 1400 ரூபாய்க்கும், ஒரு கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் சிரமத்தில் இருக்கும் நிலையில், தற்போது தக்காளி விலையும் உயர்ந்து இருப்பது மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.

Next Story
Share it