இன்று மாலை.. குழந்தைகள் பார்க்க வேண்டாம்- பயம் காட்டும் ஆண்ட்ரியா !

இன்று மாலை.. குழந்தைகள் பார்க்க வேண்டாம்- பயம் காட்டும் ஆண்ட்ரியா !

இன்று மாலை.. குழந்தைகள் பார்க்க வேண்டாம்- பயம் காட்டும் ஆண்ட்ரியா !
X

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தில், புதிய பாணியில் பேசும் இயக்குநர்களில் இருக்கும் வெகுசிலர் பிரபலமானவர் மிஷ்கின். இவர் இயக்கும் படங்கள் எப்போதும் தனி வரிசையில் இருக்கும். அந்த வகையில், சைக்கோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் வேளைகளில் இறங்கினார். அப்போது நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக படத்திலிருந்து விலகினார்.
pisasu

இதனை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் 'பிசாசு 2' படத்தை இயக்கியுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, பிசாசு 2 படத்தையும் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவை பிரதானமாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

pisasu

மேலும், பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா ஆடையில்லாமல் சில காட்சிகளில் நடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து கொண்டு கையில் சிகரெட்டை பிடித்திருப்பதை போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

pisasu

இந்த நிலையில், இந்தப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்நிலையில் டீசருக்கான விளம்பரத்தில் குழந்தைகள் யாரும் இந்த டீசரை பார்க்க வேண்டாம் என படக்குழுவினர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. டீசருக்கு இவ்வளவு எச்சரிக்கை விடப்படுவதால், படம் வேரலேவலில் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it