Theme Check

வரி செலுத்தாத வணிகர்கள்.. நகராட்சி ஊழியர் செய்த காரியம்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்..!

வரி செலுத்தாத வணிகர்கள்.. நகராட்சி ஊழியர் செய்த காரியம்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்..!

வரி செலுத்தாத வணிகர்கள்.. நகராட்சி ஊழியர் செய்த காரியம்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்..!
X

ஆந்திராவில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருக்கும் ஒவ்வொரு கடைகளிலும் குப்பையை அள்ளிச் செல்ல மாத கட்டணமாக 100 முதல் 500 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. இதற்காக, தனியார் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று, கர்னூலில் உள்ள பஜார் தெருவில் வார்டு செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு கடையாகச் சென்று வரி வசூலித்து வந்தனர்.

அப்போது சில கடைக்காரர்கள், சொத்து வரி, குழாய் வரி மற்றும் டிரேட் லைசென்ஸ் கட்டணம் போன்றவை செலுத்தும்போது எதற்காக குப்பை வரி செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

இதனால் கோபமான நகராட்சி ஊழியர், வெவ்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொண்டு வந்து பஜார் தெருவில் கேள்வி கேட்டவர்களின் கடைகளின் முன்பு கொட்டி விட்டுச் சென்றார்.

இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த வணிகர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர், நகராட்சி பணியாளரின் இத்தகைய மோசமான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

வணிகர் சங்கத்தினர் புகார் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த அதிகாரிகள் கடைகளின் முன்பு கொட்டப்பட்டிருந்த குப்பைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அந்த குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

Next Story
Share it