சோகம்! கோர விபத்தில் பறிபோன 3 உயிர்கள்!!
சோகம்! கோர விபத்தில் பறிபோன 3 உயிர்கள்!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ராஜபாளையம் தனியார் கல்லூரி மாணவிகளை ஏற்றி பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே ஒரு கார் மற்றொரு வாகனத்தை தாண்டி வேகமாக வந்து கல்லூரி பேருந்து முன்பு மோதியது.
இதில் காரில் பயணம் செய்த திருச்சி திருப்பராய்த்துறையை சேர்ந்த டிரைவர் முத்துக்குமார் (46), , அவரது மனைவி ராஜேஸ்வரி (37), மூதாட்டி பெரியக்காள் (62) மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை மீட்டனர். ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரின் பாகங்களை உடைத்து பிரேதங்களை மீட்டனர்.

விபத்து காரணமாக ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வாகனங்கள் போக்குவரத்து சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கின. கல்லூரிப் பேருந்தின் ஓட்டுநர் ராமசாமி என்பவருக்கு இடுப்பு பகுதியில் பலத்த அடிபட்டது. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

