சோகம்..!! உயிரிழந்த நபரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு திரும்பிய காவலர் விபத்தில் சிக்கி பலி..!!
சோகம்..!! உயிரிழந்த நபரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு திரும்பிய காவலர் விபத்தில் சிக்கி பலி..!!

உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி நகரில் ஸ்ரீ ராம்ஸ்வரூப் பல்கலைக்கழகம் உள்ளது. முன்னாள் மாணவரான சுயாஷ் (25) தனது நண்பர் அலோக் (26) என்பவருடன் பல்கலைக்கழகத்தில் நடந்த கலாசார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் உணவு விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளனர்.
சுயாசுக்கும், அந்த பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் குழுவுக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. அந்த குழு, உணவு விடுதிக்கு சென்று சுயாசையும், அவரது நண்பரையும் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் ராஜ்குமார் பாண்டே மற்றும் ஜெயாஷ் ராம் ஆகிய இருவரும் படுகாயம் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சுயாஷ் உயிரிழந்து விட்டார். அலோக் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டு திரும்பும் வழியில் கான்ஸ்டபிள்கள் இருவரும் சென்ற பைக் கால்நடை மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை லக்னோ நகரில் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். இதில், ராஜ்குமார் பாண்டே சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

