கால்களை கழுவ ஓடையில் இறங்கிய 6 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!
கால்களை கழுவ ஓடையில் இறங்கிய 6 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!

கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென்மெற்கு பருவமழையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 14 மாவட்டங்களில் கனமழையானது, கடந்த ஒருவாரமாக பெய்து வருகிறது. சிக்மங்களூரு மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன மின் கம்பங்கள் சரிந்துள்ளது.

இந்த நிலையில், சிக்மகளூர் தாலுகாவில் உள்ள ஹோஸ்பேட் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சுப்ரிதா (6). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாத சிறுமி இன்று பள்ளிக்கு சென்றுள்ளார்.
மாலை சுப்ரிதா தனது மூத்த சகோதரனுடன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, அவரது கால்களில் சேறு படிந்ததால், அவரது அண்ணன் மற்றும் சகோதரி இருவரும் கிராமத்தின் அருகே உள்ள ஓடையில் கால்களைக் கழுவச் சென்றனர். அப்போது சுப்ரிதா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், சிறுமியை கண்டுபிடிக்க முயன்றனர். எனினும் அவர்களால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து ஓடும் ஓடையில் சிறுமியை கண்டுபிடிக்க முயன்றனர்.
எனினும் சிறுமியை கண்டு பிடிக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் தினறி வருகிறார்கள். இந்த சம்பவம், சுப்ரிதாவின் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

