ரயில் படியில் பயணம் செய்த வடமாநில இளைஞருக்கு நடந்த விபரீதம் !!
ரயில் படியில் பயணம் செய்த வடமாநில இளைஞருக்கு நடந்த விபரீதம் !!

சென்னை அருகே ரயில் படியில் பயணம் செய்த வடமாநில இளைஞர் தவறி விழுந்து பலி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று சென்றுள்ளது. பாண்டிச்சேரி - திருப்பதி பயணிகள் ரயிலில் ஏராமானானோர் பயணம் செய்துள்ளனர். அப்போது இளைஞர்கள் சிலர் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர்.

அப்போது படியில் பயணம் செய்த அடையாளம் தெரியாத வடமாநில இளைஞர் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து உடனிருந்தவர்கள் அவரது கையை பிடித்து இழுத்து போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர் ரயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் இவர் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்பதும். இவர், விழுப்புரத்தில் இருந்து படியில் பயணம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த மரணத்துக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடத்துகின்றனர்.

