Theme Check

வாந்தியால் சோகம்.. பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு !

வாந்தியால் சோகம்.. பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு !

வாந்தியால் சோகம்.. பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு !
X

வாந்தி வருவதால் பேருந்தின் படிக்கட்டு ஓரம் நின்று பயணித்த இளம்பெண் தவறிவிழுந்து உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா கீரனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணனின் மகள் அபிபாரதி (19). இளம்பெண் அபிபாரதி நேற்று மாலை சிதம்பரத்திலிருந்து கீரனூருக்கு தனியார் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது வாந்தி வருவதாக கூறி பேருந்தின் படிக்கட்டு ஓரம் வந்து நின்று பயணித்துள்ளார்.

தனியார் பேருந்தும் வேகமாக சென்றுள்ளது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து இளம்பெண் அபிபாரதி கீழே விழுந்தார். இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டதால், சிறிது தூரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. சகபயணிகள் ஓடிச்சென்று பார்த்தப்போது அவர் பலத்த காயம் அடைந்திருந்தார்.

அபிபாரதி

உடனடியாக இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அபிபாரதி உயிரிழந்தார். இது சம்பந்தமாக புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it