Theme Check

குழுவாக சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த சோகம் !!

குழுவாக சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த சோகம் !!

குழுவாக சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த சோகம் !!
X

நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் இரு நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை நகர உட்கோட்டம் புதுமந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு தனியார் விடுதிக்கு பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 10 நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர்.

இவர்கள் குழுவாக பல இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். அங்குள்ள கல்லட்டி ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்ற நிலையில் அப்பகுதியில் நின்று இயற்கை அழகை ரசித்ததோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக குட்ட வினிதா சௌத்ரி என்பவர் கல்லட்டி ஆற்றில் சிக்கினர். பின்னர் தண்ணீர் வேகம் காரணமாக அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

dsf

இதன் பொருட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ள மாநில பேரிடர் மீட்பு குழு கூடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

water death

இந்த நிலையில் நேற்று மாலை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண் இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் அந்தப் பெண்ணின் பிரேதத்தை மாநில பேரிடர் மீட்புக் குழு மீட்டனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா வந்த இடத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it