Theme Check

திருப்பூரில் சோகம்.. லாரி மீது பைக் மோதல்.. துடிதுடித்து இறந்த 2 பேர்..!

திருப்பூரில் சோகம்.. லாரி மீது பைக் மோதல்.. துடிதுடித்து இறந்த 2 பேர்..!

திருப்பூரில் சோகம்.. லாரி மீது பைக் மோதல்.. துடிதுடித்து இறந்த 2 பேர்..!
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர், திருப்பூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், பிரதீப் தனது உறவினரான பழனியம்மாள் மற்றும் பழனியம்மாள் மகன்களான சஞ்சய், சரவணன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூரிலிருந்து சோமனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சுல்தான்பேட்டை அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பழனியம்மாளின் ஒரு கால் துண்டானது. அவருடைய மகன்களான சஞ்சய், சரவணன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனியம்மாள், அவரது மகன்களான சஞ்சய், சரவணனை காவல்துறையினர் மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.​​

Next Story
Share it