Theme Check

ஆம்பூர் அருகே சோகம்.. லாரி மீது வேன் மோதல்.. 4 பேர் பலி..!

ஆம்பூர் அருகே சோகம்.. லாரி மீது வேன் மோதல்.. 4 பேர் பலி..!

ஆம்பூர் அருகே சோகம்.. லாரி மீது வேன் மோதல்.. 4 பேர் பலி..!
X

ஆம்பூர் அருகே, லாரி மீது வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் தனியார் செருப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் உள்பட ஏராளமானோர் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்காக ஆலை சார்பில் வேன் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி தொழிற்சாலை வேன் வந்து கொண்டிருந்தது.

சோலூர் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு எதிர் திசைக்கு சென்றது.

எதிர்திசையில் சுண்ணாம்பு மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது வேன் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் பெண் தொழிலாளர்கள் 3 பேர் உட்பட வேனில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த 20-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it