Theme Check

மேய்ச்சலுக்கு சென்றபோது சோகம்.. அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் பலி..!

மேய்ச்சலுக்கு சென்றபோது சோகம்.. அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் பலி..!

மேய்ச்சலுக்கு சென்றபோது சோகம்.. அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் பலி..!
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஊனையூர் கிராமத்தில் சின்னக்கருப்பன் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது.

அந்த வயலில், அதே கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா மற்றும் மல்லுபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், கென்னடி மற்றும் வடிவேலு ஆகியோருக்கு சொந்தமான நான்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த நான்கு மாடுகளும் மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்தன.
4-cows-tragically-killed-when-they-stepped-on-a-power-line-cut-during-grazing

இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரி, வருவாய்த் துறையினர் மற்றும் மின்சார வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இதுகுறித்து, உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்கள் கூறுகையில், ‘தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரிசெய்ய பலமுறை மின்சார வாரியத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, உடனடியாக மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும். அத்துடன், உயிரிழந்த நான்கு மாடுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர்.
Next Story
Share it