Theme Check

வீட்டில் ஈரத்துணிகளை காயவைத்த போது விபரீதம்... 4 பேர் துடிதுடித்து பலி..!!

வீட்டில் ஈரத்துணிகளை காயவைத்த போது விபரீதம்... 4 பேர் துடிதுடித்து பலி..!!

வீட்டில் ஈரத்துணிகளை காயவைத்த போது விபரீதம்... 4 பேர் துடிதுடித்து பலி..!!
X

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி நகரில் பீடி தொழிலாளர்கள் காலனியை சேர்ந்தவர் அகமது (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பர்வீன் (30) என்ற மனைவியும், மஹீம் (6) என்ற ஒரு மகளும், பைசான் (5), அத்னான் (3) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் சிறிய ஓலை வீட்டில் வசித்து வந்தார்.

Telangana

பைசான் தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற நிலையில் மற்ற நான்கு பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டின் சுவரில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் பர்வீன் துணிகளை உலர்த்தும் போது மின்சாரம் தாக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முகமது, அவரை காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தனர்.

பெற்றோர்கள் விழுவதைப் பார்த்த அவர்களது மகள் மஹீம், மகன் அத்னான் ஆகியோர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Telangana

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்து மின்சாரத்தை நிறுத்தினர். இதுகுறித்து காமரெட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இரும்பு கம்பிக்கு அருகில் சென்ற வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது என்றும் இதை அறியாமல் அந்த கம்பி மீது பர்வீன் துணிகளைக் காயப் போட முயன்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.

Next Story
Share it