Theme Check

துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்.. ஆட்டோ மீது லாரி மோதல்.. 3 பேர் பலி..!

துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்.. ஆட்டோ மீது லாரி மோதல்.. 3 பேர் பலி..!

துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்.. ஆட்டோ மீது லாரி மோதல்.. 3 பேர் பலி..!
X

கர்நாடக மாநிலம் தாவணகெரே கெலகோடி பகுதியைச் சேர்ந்தவர் ஹாலப்பா. இவர், தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் 9 பேருடன் ஒரு ஆட்டோவில் சென்றுள்ளனர்.

அவர்கள் பயணித்த ஆட்டோ கத்ரா குளம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோ முற்றிலும் சேதமடைந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, ஆட்டோவுக்குள் சிக்கியிருந்த 9 பேரை மீட்டு சித்ரதுர்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஹாலப்பா (70), ருத்ரப்பா (58), பசவராஜப்பா (45) ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த 6 பேருக்கு சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it