பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே சோகம்.. 3 மாணவர்கள் பலி !!
பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே சோகம்.. 3 மாணவர்கள் பலி !!

பள்ளிகள் தொடங்கிய சில நாட்களிலேயே பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூன்று மாணவ, மாணவிகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், மத்தியபிரதேச மாநிலம் பாலஹட் மாவட்டம் சீதாபூர் கிராமத்தில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பின் மாணவ- மாணவிகள் அனைவரும் வீடு திரும்பினர்.

அப்போது, அந்த பள்ளியில் படித்த மாணவன், 2 மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அக்கம்பக்கத்திலும் திவிரமாக தேடினர். அப்போது, கிராமத்திற்கு அருகே உள்ள குட்டையில் 3 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முடிந்து குட்டைக்கு குழந்தைகள் சென்றது எப்படி என விசாரணை நடத்துகின்றனர்.
newstm.in

