மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த திருநங்கை தேர்வு!!
மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த திருநங்கை தேர்வு!!

விழுப்புரம் மிஸ் கூவாகம் அழகி போட்டியில் இந்த ஆண்டிற்கான மிஸ் கூவாகமாக சென்னையைச் சேர்ந்த மெகந்தி தேர்வு செய்யப்பட்டார்.
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகளுக்கான கலை விழா மற்றும் மிஸ் கூவாகம் அழகி போட்டி விழுப்புரத்தில் உள்ள நகராட்சி மைதானத்தில் நடைப்பெற்றது.
கொரோனா கட்டுபாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா நடைப்பெறாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு கடந்த 5ஆம் தேதி சாலை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி இன்றும், நாளை கூத்தாண்டவர் தேரோட்டமும், திருநங்கைகள் விதவை கோலம் எற்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
சிறப்புமிக்க இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா, கர்நாடகா, டில்லி, கொல்கத்தா, மும்பை என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.
விழுப்புரத்தில் குவிந்துள்ள திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகளுக்கான கலை விழா மற்றும் மிஸ் கூவாகம் அழகி போட்டி விழுப்புரத்தில் உள்ள நகராட்சி மைதானத்தில் நடைப்பெற்றது.

100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான உடைகளை அணிந்து இசைக்கு ஏற்றபடி நலினத்துடன் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
இறுதியில் இந்த ஆண்டிற்கான மிஸ் கூவாகமாக சென்னையைச் சேர்ந்த விமான பணிப்பெண் பயிற்சி பெற்ற பட்டதாரி மெகந்தி தேர்வு செய்யப்பட்டார்.
newstm.in

