Theme Check

அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு..!!

அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு..!!

அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு..!!
X

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்ற பின்னர், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்துத்துறை அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.
  • பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது.
  • நடத்துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடம் இல்லை எனப் பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடவோ அல்லது அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.
  • வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிந்து, அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என உத்தரவிடபட்டுள்ளது.

மேலும், அரசு பேருந்துகளில் எச்சில் தொட்டு பயணிகளுக்கு நடத்துனர்கள் டிக்கெட் தரக்கூடாது என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பயணிகளின் புகாரையடுத்து நடத்துனர்களுக்கு உத்தரவிடடப்பட்டுள்ளது.

Next Story
Share it