இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி!! பாஜகவை சேர்ந்த இருவர் கைது!!
இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி!! பாஜகவை சேர்ந்த இருவர் கைது!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த சண்முக சுந்தரம் (38), அதே பகுதியைச் சேர்ந்த தூரத்து உறவினரான 27 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
அத்துடன் தனது விருப்பத்தை சண்முக சுந்தரம் அந்த பெண்ணிடம் கூறியதற்கு தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்கச் சொல்லியுள்ளார். ஆனால், அவரது பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ஜூன் 18 அப்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவர், தனது காரில் வந்து பெண்ணை வழிமறித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, பொன்னேகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள கோயிலில் வைத்து கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், அவரிடம் இருந்து தப்பிய இளம்பெண் அன்னூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கைது செய்த அன்னூர் போலீசார், அவரது நண்பரான கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார்(43) என்பவரையும் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என தெரியவர இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம் பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

