Theme Check

உப்பு நிரப்பும் போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழப்பு..!!

உப்பு நிரப்பும் போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழப்பு..!!

உப்பு நிரப்பும் போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழப்பு..!!
X

மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் சாகர் உப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சாக்கு மூட்டைகளில் உப்பு நிரப்பும் பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதையுண்டு இருக்கலாம் என்றும் இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘மோர்பியில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து இதயத்தை உருக்குகிறது. இந்த துக்க நேரத்தில் என் எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் இருக்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

மோர்பியில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் பூபேந்திர படேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் விரைவு பணிகளை துரிதபடுத்தும்படி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story
Share it