Theme Check

எலான் மஸ்கிற்கு பிறந்துள்ள இரட்டை குழந்தைகள்... 9 குழந்தைகளுக்கு தந்தை!!

எலான் மஸ்கிற்கு பிறந்துள்ள இரட்டை குழந்தைகள்... 9 குழந்தைகளுக்கு தந்தை!!

எலான் மஸ்கிற்கு பிறந்துள்ள இரட்டை குழந்தைகள்... 9 குழந்தைகளுக்கு தந்தை!!
X

51 வயதான எலான் மஸ்க் தனது நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் (36) என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரட்டை குழந்தைகள் கடந்த நவம்பர் மாதம் பிறந்துள்ளன.கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் மற்றும் சிலிஸ் ஆகிய இருவரும் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது அதன் ஆவணங்கள் மூலம் இந்த செய்தி உறுதியாகியுள்ளது.

எலான் மஸ்க்கின் நிறுவனத்தில் ஷிவோன் சிலிஸ் 2017ஆம் ஆண்டு மே மாதம் வேலைக்குச் சேர்ந்தார். டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் திட்ட இயக்குனராக பணியாற்றிய ஷிவோன் சிலிஸ், 2019ஆண் ஆண்டில் நியூராலிங்கில் சேர்ந்தார்.

Elon-Musk 1

ட்விட்டர் நிறுவனத்துடன் எலான் மஸ்க்கின் ஒப்பந்தம் நிறைவடைந்த பின், அதனை ஷிவோன் முன்னின்று நடத்துவார் எனக் கூறப்படுகிறது. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள்.

எலாஸ் மஸ்க்கின் முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவின் பாடகர் கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.

உலகில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து இளம் வயதினர் எண்ணிக்கை குறைந்து வருவதாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் எலான் மஸ்க், அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டு, பெரிய குடும்பங்களாக வாழத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

newstm.in

Next Story
Share it