ட்விட்டரின் ஒப்பந்தம் தூக்கி ஏறிப்படும்... எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்!!

ட்விட்டரின் ஒப்பந்தம் தூக்கி ஏறிப்படும்... எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்!!

ட்விட்டரின் ஒப்பந்தம் தூக்கி ஏறிப்படும்... எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்!!
X

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம் செய்தார்.

Elon-has-decided-not-to-join-our-board-tweets-Twitter-CEO

அதை தொடர்ந்து, அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். ட்விட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் ட்விட்டரில் 20 முதல் 50 சதவீதம் வரை போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால், 5 சதவீதத்திற்கு குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்தார். இதனால் முன்னர் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

Elon-Musk-captures-Twitter

பின்னர் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் 5 சதவீதம் குறைவாக போலி கணக்குகள் இருக்கிறது என்பதன் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட மறுத்துவிட்டார். அதை அவர் நிரூபிக்கும் வரை ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ட்விட்டர் சமூக ஊடக வலையமைப்பில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவை வழங்கத் தவறினால், இந்நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் விலகிச் செல்லக்கூடும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மஸ்க் தரப்பில் அனுப்பிய கடிதத்தில் எச்சரித்துள்ளார்.

Tags:
Next Story
Share it