Theme Check

சுற்றுலா வேன் மோதி காவலர்கள் இரண்டு பேர் உயிரிழப்பு!!

சுற்றுலா வேன் மோதி காவலர்கள் இரண்டு பேர் உயிரிழப்பு!!

சுற்றுலா வேன் மோதி காவலர்கள் இரண்டு பேர் உயிரிழப்பு!!
X

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு அருகே சாலை விரிவாக்கப் பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு நெல்லையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதையில் செல்லாமல் தடுப்பு தகரத்தின் மீது அதி பயங்கரமாக மோதி நின்றது.

ஓசூரை சேர்ந்த அரியநாயகம் என்பவர் காரை ஓட்டி வந்தார். இவருக்கும் இவருடன் வந்தவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் காரை இயக்க முடியாததால் மீட்பு வாகனத்திற்கு போன் செய்துவிட்டு காரிலேயே காத்திருந்தார்.

விபத்து குறித்து விவரம் அறிந்த ராசிபுரம் காவல்துறையைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சுமார் 2 மணி அளவில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரை அழைத்துக்கொண்டு சென்றார்.

acc

விபத்து நடந்த இடம் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரணத்தினால் புதுச்சத்திரம் காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவருடன் அங்கு வந்தார்.

காரில் இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில், திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊரான இளம்பிள்ளை திரும்பிய சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த இரண்டு காவலர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காவலர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். வேனில் 25 பேர் குடும்பத்துடன் வந்த நிலையில் அதில் 5 பேருக்கு பலமான காயம் ஏற்பட்டதால் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.

newstm.in

Next Story
Share it