Theme Check

இரண்டு காதல் ஜோடிகள் ஒரே நேரத்தில்.. ஓமலூரில் பரபரப்பு.. போலீசார் சமரசம்..!

இரண்டு காதல் ஜோடிகள் ஒரே நேரத்தில்.. ஓமலூரில் பரபரப்பு.. போலீசார் சமரசம்..!

இரண்டு காதல் ஜோடிகள் ஒரே நேரத்தில்.. ஓமலூரில் பரபரப்பு.. போலீசார் சமரசம்..!
X

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ராக்கி பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தர்மபுரியைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.

இதனால், பெண் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக ஓமலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதேபோல, காமலாபுரத்தைச் சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு, இரு வீட்டாரும் மிரட்டல் விடுப்பதாக ஓமலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓமலூர் இன்ஸ்பெக்டர் இந்திரா, இரண்டு காதல் ஜோடிகளின் பெற்றோரையும் அழைத்து சமாதானம் செய்தனர்.

அப்போது, காவல் நிலையத்தின் வெளியே உறவினர்கள் கூட்டம் கூட்டமாக கூடி ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதனால், அங்கு தகராறு ஏற்படும் சூழல் நிலவியது.

இதையடுத்து அங்கு வந்த பெண் போலீசார், காவல் நிலையம் முன்பு இருந்த கூட்டத்தை கலைத்து வெளியேற்றினர். பின்னர் காதல் ஜோடிகளை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டு காதல் ஜோடிகள் மற்றும் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
Share it