Theme Check

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கம்!!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கம்!!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கம்!!
X

.நா. பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதால் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டது.

47 உறுப்பினர்களை கொண்டது .நா.வின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்கள் .நா. பொதுச்சபையின் 193 உறுப்பு நாடுகளால் மூன்றாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷ்யாவும் உறுப்பினராக இருந்தது.

இந்நிலையில், உலகின் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து, ரஷ்யாவை நீக்க அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

un geneva

உக்ரைன் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ரஷ்ய வீரர்கள் பின்வாங்கும் போது அங்குள்ள பொதுமக்களை கண்மூடித்தனமாக கொன்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

புச்சா பகுதியில் நடைபெற்ற படுகொலை சம்பவங்களை தொடர்ந்து, மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்தார்.

un geneva1

தீர்மானத்திற்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 நாடுகள் வாக்குகளும் பதிவாகின. 58 நாடுகள் வாக்களிக்காமல் தீர்மானத்தை புறக்கணித்தன. 3ல் 2 பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக பதிவானதால் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை ஐநா பொதுச் சபை இடைநீக்கம் செய்துள்ளது.

newstm.in

Next Story
Share it