அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கொரோனா பாதிப்பு..!!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கொரோனா பாதிப்பு..!!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கொரோனா பாதிப்பு..!!
X

ஆன்டனியின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திய பின்னரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் லேசான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் மேற்கொண்ட முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என்றும், அடுத்த பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியானது.

ஆன்டனி பல நாட்களாக அதிபர் ஜோ பைடனை சந்திக்கவில்லை. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆன்டனியுடன் ஜோ பைடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆன்டனி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு, வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார். இதில் இருந்து மீண்டு, மீண்டும் முழு அளவில் பணிக்கு வரவும் பயணங்களை மேற்கொள்ளவும் அவர் எதிர்பார்த்து உள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறினார். இதேபோன்று கடந்த மார்ச் மாதம், வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகிக்கு 2வது முறையாக கொரோனா உறுதியான நிலையில், அதிபர் ஜோ பைடனுடனான பயண திட்டத்தினை ரத்து செய்து விட்டார்.

Tags:
Next Story
Share it