விரைவில் அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்?
விரைவில் அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்?

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கூட்டத்தில், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திருச்சி திமுக தெற்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் ஜூன் 3-ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கழகக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திருச்சி கிழக்குசட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன் ,என். கோவிந்தராஜன், அரங்கநாதன் , செந்தில் மற்றும் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,பகுதி, நகர,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

