Theme Check

உதயநிதி முதலமைச்சராக தயாராக இருக்கிறார் : அமைச்சர் அதிரடி!!

உதயநிதி முதலமைச்சராக தயாராக இருக்கிறார் : அமைச்சர் அதிரடி!!

உதயநிதி முதலமைச்சராக தயாராக இருக்கிறார் : அமைச்சர் அதிரடி!!
X

ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக தயாராக இருக்கிறார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.

இன்னும் 20 ஆண்டுகள் வரை நமது மு..ஸ்டாலின் தான் முதல்வர். திமுகவை எதிர்த்து சண்டை போட ஆளே இல்லை. முதலில் நீங்கள் சேர்ந்து கொண்டு பின்பு சண்டைக்கு வாருங்கள் என அதிமுகவை சாடினார்.

kkssr

ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக தயாராக இருக்கிறார். வாரிசாக இருந்தாலும் கஷ்டப்பட்டுதான் மேலே வருகிறார்கள் என்றார்.

10 வருட கேடு கெட்ட ஆட்சி நடைபெற்றது. அதிமுக கஜானாவை சுரண்டி விட்டார்கள். திமுக வந்து பார்த்த உடன் கஜானாவில் ஒன்றும் இல்லை. வெறும் பெட்டி 1 ரூபாய் காசு கூட இல்லை. பெட்டியை திறந்தால் கடன் பேப்பர் மட்டுமே உள்ளது.

டெல்லிக்கு பயப்படாத ஒரு தலைமை நமது தலைமை, எடப்பாடி அங்கே தலையை குணிந்து விடுவார். மோடி முன்பு மாப்பிள்ளை போல் ஸ்டாலின் அமர்கிறார் என்று அவர் கூறினார்.

newstm.in

Next Story
Share it