ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களை கொன்றால் பரிசுத் தொகை.. உக்ரைன் அறிவிப்பு !!

ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களை கொன்றால் பரிசுத் தொகை.. உக்ரைன் அறிவிப்பு !!

ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களை கொன்றால் பரிசுத் தொகை.. உக்ரைன் அறிவிப்பு !!
X

செர்ஹினவ் பகுதியில் நுழைந்துள்ள எதிரிகளை கொலை செய்வோருக்கு 300 டாலர் பரிசு வழங்கப்படும் என உக்ரைனின் செர்ஹினவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 6ஆவது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனிடையே, உக்ரைன் நாட்டு மக்கள் தங்கள் மண்ணை பாதுகாப்பதற்கு கையில் ஆயுதம் ஏந்த தொடங்கியுள்ளனர். ரஷிய வீரர்களை எதிர்த்து போராட உக்ரைன் சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்தார். ஏற்கனவே ரஷ்யாவுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பெலாரஸ் நாட்டு படைகளும் உக்ரைனுக்குள் புகுந்துள்ளது.

belarus army

ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக, உக்ரைனில் இருக்கும் பெலாரஸ் நாட்டு மக்களை தேடிபிடித்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்துவதாகவும் இது கண்டிக்கத்தக்கது எனவும் பெலாரஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் பெலாரஸ் படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், உக்ரைனின் செர்ஹினவ் பகுதியில் நுழைந்துள்ள எதிரிகளை கொலை செய்வோருக்கு 300 டாலர் பரிசு வழங்கப்படும் என செர்ஹினவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராணுவ டாங்கிகளை கொண்டு வந்தால் 2,50,00 உக்ரைன் பணம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. அப்பகுதியில் பெலாரஸ் படைகள் நுழைந்துள்ள நிலையில் செர்னிஹவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது


newstm.in

Tags:
Next Story
Share it