போரை நிறுத்த உக்ரைன் விரும்பவில்லை.. ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு !!

போரை நிறுத்த உக்ரைன் விரும்பவில்லை.. ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு !!

போரை நிறுத்த உக்ரைன் விரும்பவில்லை.. ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு !!
X

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 1.3 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பின், மிக மோசமான இடம்பெயர்வு என்று கூறப்படுகிறது.


உக்ரைன் உருக்குலைந்து காணப்படுகிறது. அரசு கட்டிடங்கள், விமான நிலையங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரான்ஸ் அதிபர் மக்ேரானிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை மேற்கு நாடுகள் நிறுத்த வேண்டும்.

G

மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. உக்ரைன் மீது உரிய அழுத்தங்களை கொடுப்பதன் மூலமும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை நிறுத்துவதன் மூலமும் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும். ரஷ்ய தரப்பில் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம்’ என்றார். தொடர்ந்து மக்ரோன் கூறுகையில், ‘உக்ரைன் மீதான படையெடுப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Newstm.in

Tags:
Next Story
Share it