சிறை கைதிகளை களத்தில் இறக்கிய உக்ரைன்.. ரஷ்யாவை எதிர்க்க புதிய வியூகம் !!
சிறை கைதிகளை களத்தில் இறக்கிய உக்ரைன்.. ரஷ்யாவை எதிர்க்க புதிய வியூகம் !!

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 5 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்படுத்துள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தங்கள் நாட்டின் அணு ஆயுதப் படையை தயார் நிலையில் இருக்குமாறு நேற்று உத்தரவிட்டார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஷ்யாவின் அணு ஆயுத மும்முனைப் படைகள் தயாராக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 5,300க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்ய ராணுவத்தின் 191 பீரங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர 816 கவச வாகனங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும், ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.
நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷ்யாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிரான போரில் சண்டையிட விரும்பினால் ராணுவ அனுபவம் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் நாட்டை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறி உள்ளார்.
newstm.in