Theme Check

இந்தியர்களை ரயில்களில் ஏற்ற மறுக்கும் உக்ரைன் ராணுவம்!?

இந்தியர்களை ரயில்களில் ஏற்ற மறுக்கும் உக்ரைன் ராணுவம்!?

இந்தியர்களை ரயில்களில் ஏற்ற மறுக்கும் உக்ரைன் ராணுவம்!?
X

உக்ரைனிலிருந்து வெளியேற ரயில்களில் ஏற வரும் இந்திய மாணவர்களுக்கு அனுமதி மறுப்படுவதை நிரூபிக்கும் வகையில் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதால் அந்நாட்டை விட்டு இந்தியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர்.

இந்த சூழலில், எல்லையோர நகரங்களுக்கு செல்ல ரயில்களை பயன்படுத்த விடாமல் இந்திய மாணவர்களை உக்ரைன் போலீஸாரும், ராணுவத்தினரும் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து இந்தியத் தூதரகம் கவலை தெரிவித்தை அடுத்து, உக்ரைனில் இன, நிறப் பாகுபாடு காட்டப்படுவதில்லை என அந்நாட்டு அரசு விளக்கமளித்தது.

ukraine train 1

இந்நிலையில், விளக்கம் வெளியான சில நிமிடங்களில் இந்திய மாணவர்களை ரயிலில் ஏற அனுமதிக்க மறுக்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், கார்கிவிலிருந்து வெளியேற ரயில் நிலையங்களுக்கு சென்ற இந்திய மாணவர்களை ரயில்களில் ஏற்றாமல் அங்குள்ள போலீஸார் வெளியேற்றுவதை காண முடிகிறது.

அதேபோல, ரயிலில் தங்களையும் ஏற்றி கொள்ளுமாறு இந்திய மாணவர்கள் உக்ரைன் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கும் காட்சியையும் பார்க்க முடிகிறது.

newstm.in

Next Story
Share it