Theme Check

அண்டர்டேக்கர் கண்ணீர்.. ரசிகர்கள் அதிர்ச்சி !!

அண்டர்டேக்கர் கண்ணீர்.. ரசிகர்கள் அதிர்ச்சி !!

அண்டர்டேக்கர் கண்ணீர்.. ரசிகர்கள் அதிர்ச்சி !!
X

WWE எனப்படும் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று உலகப்புகழ் பெற்றவர் ’தி அண்டர்டேக்கர்'. மார்க் காலவே என்ற நிஜப்பெயரை கொண்ட 57 வயதான தி அண்டர்டேக்கர், 2020 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இவர் 30 ஆண்டுகளாக WWE போட்டியில் பங்கேற்றுள்ளார். ’தி டெட்மேன்’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து, ‘தி லாஸ்ட் ரைட்’ எனும் ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

the undertaker

WWE போட்டிகளில் முன்னோடி என தி அண்டர்டேக்கர் அழைக்கப்படுகிறார். 1992ஆம் ஆண்டு நடந்த சவப்பெட்டியில் எதிராளியை வைத்து பூட்டும் போட்டி, 1996-ல் நடந்த உயிருடன் புதைக்கும் போட்டி போன்றவற்றின் முதல் போட்டிகளில் தி அண்டர்டேக்கர் பங்கேற்றுள்ளார்.

உலகம் முழுக்க இவர் மிகப்பிரபலமாக இருந்தாலும், தனது சகாக்களான ஜான் சீனா மற்றும் தி ராக் ஜான்சன் போல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இல்லை. திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோதும் அதனை மறுத்துவிட்டார்.

the undertaker

இந்த நிலையில், ஹால் ஆஃப் ஃபேம்-ல் அண்டர்டேக்கர் சேர்க்கப்பட்டார். இதனையொட்டி மேடைக்கு பேசவந்த அவருக்கு, அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கனோர் கரகோஷம் எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர். சுமார் இரண்டு நிமிடத்துக்கும் மேலாக கைத்தடி வரவேற்பு அளித்ததால், ரசிகர்களின் அண்மை உணர்ந்த அண்டர்டேக்கர் கண்ணீர் விட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். வளையத்துக்குள் எப்போதும் முரட்டுத்தனமாக கடுமையான வீரராக காணப்பட்டுவந்த அண்டர்டேக்கர் கண்ணீர் சிந்தியது, அவரது ரசிகர்களையும் கண்கலங்கச் செய்தது.


newstm.in

Next Story
Share it